Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 10.82 கோடி பீப்பாயாக அதிகரிக்கும்: OPEC

இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 10.82 கோடி பீப்பாயாக அதிகரிக்கும்: OPEC

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவையைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வரும் 2027-ம் ஆண்டில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டு உயர்வுக்கு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியே முதன்மையாகத் திகழும் என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) தெரிவித்துள்ளது.

2026-ம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அக்டோபர் 12-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பான ஒபெக் தனது விரிவான புதிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. 

அதில், 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் சந்தை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முதலீடுகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் விரிவாக ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, நடப்பாண்டில் உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தினசரி தேவை 10 கோடியே 58 லட்சம் பீப்பாய்களாக உள்ள நிலையில், 2027-ல் இது முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 கோடியே 82 லட்சம் பீப்பாய்களாக அதிகரிக்கும். 

இது நடப்பாண்டைக் காட்டிலும் நாளொன்றுக்கு 24 லட்சம் பீப்பாய்கள் கூடுதலாகும். ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சி 2026-ல் 3 சதவீதத்திலிருந்து 2027-ல் 3.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சர்வதேச வர்த்தகமும் போக்குவரத்து பயன்பாடும் அதிகரிப்பதே காரணமாக அமைகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவையைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2026-ல் 6.6 சதவீதமாகவும், 2027-ல் 6.5 சதவீதமாகவும் தொடர்ந்து உலகின் அதிவேக வேகத்தில் நீடிக்கும். இந்த வளர்ச்சியால் இந்தியாவில் பெருகிவரும் புதிய தொழிற்சாலைகள், வாகனப் பயன்பாடு மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவை சர்வதேச எண்ணெய் நுகர்வை வெகுவாக உயர்த்துகின்றன. 

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் எண்ணெய் நுகர்வு 2026-ல் தினசரி 5 லட்சம் பீப்பாய்களாக மட்டுமே உயர்ந்த நிலையில், 2027-ல் நான்கு மடங்கு வேகமெடுத்து தினசரி 20 லட்சம் பீப்பாய்களாக உயரும்.

அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 2026-ல் தினசரி தேவை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பீப்பாய்கள் அளவுக்குச் சரிவைச் சந்திக்கும். 2027-ல் தொழிற்துறை மீட்பின் காரணமாக மீண்டும் 4 லட்சம் பீப்பாய்கள் வரை தேவை அதிகரிக்கும். 

இவ்வாறு எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பிரம்மாண்ட தேவையைச் சமாளிக்கவும், பற்றாக்குறை ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துவிடாமல் தடுக்கவும், புதிய எண்ணெய் கிணறுகளைக் கண்டறிவதற்கான உலகளாவிய முதலீடு 2026-ல் 613 பில்லியன் டாலரிலிருந்து 2027-ல் 651 பில்லியன் டாலராக, அதாவது 6 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும் என ஒபெக் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது

முந்தைய செய்தி
ஈரோட்டில் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி
அடுத்த செய்தி
Onward TECH Q2 22.2% உயர்வு

தொடர்புடைய செய்திகள்